இலவச திட்டங்களை வாரி வழங்கினார் ஜெ..
கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் என்ற தி.மு.க., அறிக்கையை மிஞ்சுவதாக காட்டும் வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
- பிளஸ்- 1, பிளஸ் - 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப்.
- சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசம்.
- ரேசன்கார்டு உள்ள அனைவருக்கும் மாதம்தோறும் 20 கிலோ அரிசி இலவசம்.
- இல்லத்தரசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன மூன்றும் இலவசமாக வழங்கப்படும். (தி.மு.க.,அறிக்கையில் கிரைண்டர் அல்லது மிக்சி என விருப்பத்தேர்வின் அடிப்படையில் ஒன்று மட்டும் )
- நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும்.
- ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும்.
- மகளிருக்கு பேறுகால உதவித்தொகையாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும்.
- 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ். திருமண உதவித் தொகை ரூ. 25,000 வழங்கப்படும். மேலும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.
- அனைவருக்கும் 20 லிட்டர் மினரல் வாட்டர் வழங்கப்படும்.
- வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நபர்களுக்கு 4 ஆடுகளும், முக்கிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 60 ஆயிரம் மாடுகள் வரை இலவசம்.
- இலவசமாக நவீன பசுமை வீடுகள் : வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாடீநு செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
- இருண்ட தமிழகம் ஒளி பெற தடையில்லா மின்சாரம்.
இலவசங்கள் வழங்குவதில் தி.மு.க.,விற்கு அ.தி.மு.க., சளைத்தது அல்ல என்பதை இக்கட்சியும் நிரூபித்துள்ளது.
**நன்றி தினமலர் **

No comments:
Post a Comment