Monday, January 31, 2011

கலைஞருக்கு கடிதம்...!

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்
கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.
செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும்
விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து
விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்
சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.
             


அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு
விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த
டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும்
எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான
மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம்,
ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.
முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும்
உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம்
மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி
வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

“
நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல
போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது.
எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில
படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு
அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’
என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518
மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

Friday, January 28, 2011

Great Indian Goverment....!

2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ந் தேதி நடந்த சம்பவத்துக்கு 2011ம் ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு :

                  புதுடில்லி : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் தூக்கு ‌தண்டனை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ந் தேதி கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், அதிமுக பொதுச்செயலாளரும், அப்போதைய முதல்வரும் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பல இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்த சமயத்தில் தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேருந்து, தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக, சேலம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. 





                இந்த வழக்கை விசாரித்த சேலம் கோர்ட் தூக்கு தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது. இவர்கள், இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிலும் மேல்முறையீடு செய்தனர். சுப்ரீம் கோர்ட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பின் இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனு அளித்தனர். கருணை மனு நிலுவையில் உள்ள நிலையில் ‌இவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். இ;ந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் இந்த மறுஆய்வு மனு விசாரணை குறித்து நீதிபதிகளிடம் பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

**நன்றி தினமலர் ** 

கள்ளச்சந்தையில் எரிபொருள் விற்பனை


                   மாதம் இருமுறை பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருக்க, இன்னொருபுறம், ரூ. 10,000 கோடி அளவிற்கு கள்ளச்சந்தையில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விற்பனை அமோகமாக நடந்துள்ளது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம், காமன்‌வெல்த், ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு போன்ற ஊழல்களால் சிக்கலை சந்தித்துவரும் மத்திய அரசிற்கு, இந்த எரிபொருள் கடத்தல் விவகாரம் மேலும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

                ஒரு வாகனத்தில், 12 கிலோ லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பப்படும். இந்த வாகனம், தலா, 4 கிலோ கொள்ளளவு கொண்ட 3 பிரிவுகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இது வழக்கமான நடைமுறை ஆகும். ஆனால், கடத்தல் கும்பல் பயன்படுத்‌தும் வாகனங்களில், சிறப்பு அம்சமாக, ஒரு ரகசிய பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இந்த பகுதியில் 50 முதல் 100 லிட்டர் எரிபொருளை பதுக்க முடியும். 





             எண்ணெய் நிறவனங்களிலிருந்து எரிபொருளை நிரப்பிக் கொண்டு , பல்வேறு சோதனைகளை கடந்து, கிடங்கை விட்டு வெளியேறும் லாரி, அங்கிருந்து நேராக, கடத்தல் கும்பல் இருக்கும் பகுதிக்கு செல்லும். அங்கு தயாராக நிற்கும் கடத்தல் கும்பல், ரகசிய பகுதியில் உள்ள எரிபொருளை எடுத்து விடுவர். இந்த செயல்பாடுகள் பெரும்பாலும், நாசிக் - மும்பை நெடுஞ்சாலையில் நடைபெற்றுள்ளது.

              இந்த கடத்தல் சம்பவங்களில், தனியார் நிறுவன ஊழியர்கள், கடத்தல் கும்பல்களுக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளனர்.. கடத்தல் கும்பலின் கைக்கு வரும் எரிபொருள், பல்வேறு கலப்படத்திற்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. பெட்ரோல் விலை சமீபகாலமாக உயர்ந்து வரும் நிலையிலும், மண்ணெண்ணெய் விலை உயராததற்கு, அதில் கலப்படம் அதிகளவில் நடைபெறுவதே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

                  கடந்த 2005ம் ஆண்டில் மட்டும், கள்ளச்சந்தையில், ரூ. 10,000கோடி அளவிற்கு எரிபொருள் விற்பனை நடந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது....


**நன்றி தினமலர் **