Monday, July 4, 2011

Uninor Karnataka Noc Slideshow: Dhana’s trip to Bangalore, Karnataka, India was created by TripAdvisor. See another Bangalore slideshow. Create a free slideshow with music from your travel photos.

Saturday, April 9, 2011

சிறப்பு தேர்தல் அறிக்கை 2011


சிறப்பு தேர்தல் அறிக்கை 2011




எங்கள் ஆட்சியில் இந்தியா பாகிஸ்தானை அரை இறுதியில் வீழ்த்தியது..!!! இதையொட்டி இன்று மாலை 6 :30 க்கு தீவுத்திடலில் கலைஞருக்கு பாராட்டு விழா..!!! அனைவரும் வாரீர்...!!!
இந்திய வெற்றி பெற்றதை அடுத்து மக்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு Cricket Bat & Ball இலவசமாக வழங்கபடும்..!!!!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் இருமுறை India விளையாடும் International Cricket  போட்டியை சென்னையில் நடத்துவோம்..!!!! 






நமது இளைஞர் அணி இந்திய அணியில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது..!!! இதற்கு ஒரே ஒரு காரணம் அது கலைஞர் தான்...!!!




கலைஞர் ஆட்சியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியதை முன்னிட்டு கலைஞர் அரங்கில் நாளை மாலை 6 :30 க்கு மாபெரும் பாராட்டு விழா..!!! கலைஞருக்கு "மட்டைப்பந்துச செம்மல்" என்று தமிழக திரை உலகம்  

சார்பில் பட்டமளிக்க படும்..!!!..!!!
 


Minority திமுக அரசு Sachin டெண்டுல்கரை சதம் அடிக்க விடாமல் out ஆக்கியது..!!!! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்திய அணியில் உள்ள 

அனைவரையும் சதம் அடிக்க வைப்போம்..!!!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த கிரிக்கெட் போட்டிக்கு இலவசமாக டிக்கெட் வழங்குவோம்..!!!!

   

விஜயகாந்த: நேற்று நடந்த India vs Srilanka அரை இறுதி ஆட்டத்தில்...!!!
வேட்பாளர்: தலைவரே அது India vs Pakistan.....!!!


விஜயகாந்த்: பளார்.... பளார்..... பளார்....!!!!!!! மூடு மூடு வாய மூடு... வீட்ட்ல யார்னா பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா.. போ.. போ..!!!


  

திமுக காங்கிரஸ் கூட்டணியால் india நேற்று அபார வெற்றி பெற்றது..!!!!!


Tuesday, April 5, 2011

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க...!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.

ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய

உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,
Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்
களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)
 
 
 


அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

நம் மாநிலத்தின் நிலை??
அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமா
ந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.

இந்த மின்னஞ்சலை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறுஅஞ்சல்(Forward) செய்யவும்.
நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

போன் நம்பர் கொடுத்தால் ப்ரீ டாக்டைம் !

                       கோவையில் வீடுவீடாக வந்த வாக்காளர்களின் போன் நம்பரை வாங்கிச் சென்று இலவசமாக ரீசார்ஜ், அவர்கள் சொல்லும் கடையில் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் என சலுகைகளை தாராளமாக, ஏராளமாக அரசியல் கட்சியினர் அளித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆங்காங்கே கூடுதலான சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அப்போது வாகனங்களில் பணம் இருப்பது தெரியவந்தால் அவற்றை பறக்கும்படை போலீசார் பறிமுதல் செய்கிறார்கள்.

                    இதையும் மீறி பல்வேறு விதத்தில் வாக்காளர்கள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றனர். கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு சில இடங்களில் அரசியல் கட்சியினர் வீடுவீடாக சென்று வீட்டு உரிமையாளரின் செல்போன் எண் மற்றும் அவர்களின் வங்கி கணக்கு எண், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை வாங்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



                         இது பிற அரசியல் கட்சியினருக்கு தெரிய வரவே செல்போன் எண் வாங்கிய நபரை பிடிக்க ஓடினார்கள். அதற்குள் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இது பற்றி செல் போன் எண் கொடுத்த ஒருவர் கூறும்போது " வீடு வீடாக வந்து செல்போன் எண்ணை வாங்கியவர்கள், அந்த செல்போன் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்து கொடுப்பதாகவும் இல்லை என்றால் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் எந்த அரசியல் கட்சியினர் என்று தெரியாது என்றும் கூறினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Friday, March 25, 2011

தி.மு.க.,வுக்கு - அ.தி.மு.க., சளைத்தது அல்ல ..!

இலவச திட்டங்களை வாரி வழங்கினார் ஜெ..

              கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் என்ற தி.மு.க., அறிக்கையை மிஞ்சுவதாக காட்டும் வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.


    • பிளஸ்- 1, பிளஸ் - 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப்.
    • சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும்.
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசம்.
    • ரேசன்கார்டு உள்ள அனைவருக்கும் மாதம்தோறும் 20 கிலோ அரிசி இலவசம்.
    • இல்லத்தரசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன மூன்றும் இலவசமாக வழங்கப்படும். (‌தி.மு.க.,அறிக்கை‌யில் கிரைண்டர் அல்லது மிக்சி என விருப்பத்தேர்வின் அடிப்படையில் ஒன்று மட்டும் ) 
    • நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும்.
    • ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும்.
    • மகளிருக்கு பேறுகால உதவித்தொகையாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும்.
    • 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ். திருமண உதவித் தொகை ரூ. 25,000 வழங்கப்படும். மேலும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.
    • அனைவருக்கும் 20 லிட்டர் மினரல் வாட்டர் வழங்கப்படும்.
    • வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நபர்களுக்கு 4 ஆடுகளும், முக்கிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 60 ஆயிரம் மாடுகள் வரை இலவசம்.
    • இலவசமாக நவீன பசுமை வீடுகள் : வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாடீநு செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
    • இருண்ட தமிழகம் ஒளி பெற தடையில்லா மின்சாரம். 
           
           இலவசங்கள் வழங்குவதில் தி.மு.க.,விற்கு அ.தி.மு.க., சளைத்தது அல்ல என்பதை இக்கட்சியும் நிரூபித்துள்ளது.

**நன்றி தினமலர் ** 

Sunday, March 20, 2011

இன்றைய தமிழகம்..!

தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்பது அந்தகாலத்து தமிழகம்,
இன்றைய தமிழகம் இதோபாருங்கள்...!


Sunday, February 20, 2011

கால்நடை உணவாகிறது ரூ. 1 ரேஷன் அரிசி..!

                   
           தற்போதைய விலைவாசி உயர்வால், தவிடு ஒரு கிலோ ரூ. 8க்கும்,மாட்டு தீவனம் கிலோ ரூ. 14க்கும் விற்கும் போது, ரேஷனில் கிலோ அரிசி ரூ. 1க்கு கிடைப்பது, பலரை சிந்திக்க வைத்தது. விளைவு, ரேஷன் அரிசியை கொண்டு, மாட்டுக்கு உணவு தயாரிக்க மக்கள் தயாராகி விட்டனர். அரிசி வாங்காதவர்களது ரேஷன் கார்டுகளை பெற்று, அரிசியை மொத்தமாக வாங்குகின்றனர். 50 கிலோ அரிசியுடன், கோதுமை,சோளம், மக்காச்சோளத்தை தலா 10 கிலோ வீதமும், 2 கிலோ உளுந்தை கலந்து, மெஷினில் அரைக்க, கிலோவுக்கு ரூ. 1 அரவைக் கூலி கொடுத்து மாட்டு தீவனமாக மாற்றுகின்றனர். இதற்கு ரூ. 550 தான் செலவாகிறது. இதே அளவு மாட்டு தீவனத்தை விலை கொடுத்து வாங்கினால், ரூ. 1,200 தேவைப்படுகிறது. இந்த மாவை கொதிக்க வைத்து, தொட்டியில் கலந்து கறவை மாடுகளுக்கு கொடுக்கின்றனர். இதை உண்ணும் மாடுகள் 2 லிட்டர் பால் கூடுதலாக கறக்கின்றன என்கின்றனர். 



                                  ரேஷனில் வழங்கப்படும் ரூ. 1 ரேஷன் அரிசி, தவிட்டை விட, விலை குறைவாகவும், போதிய தரம் இல்லாமலும் கிடைப்பதால், கிராமப்புறங்களில் கால்நடைக்கு உணவாக பயன்படுத்தப்படுகிறது.
2006 சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி, ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அரிசி போதிய தரம் இல்லாததால், விரும்பி வாங்குவோர் குறைந்த நிலையில், கடத்தல் தொழில் கொடி கட்டி பறக்கிறது. அவ்வப்போது, ரேஷன் அரிசி கடத்தல் வாகனங்கள் பிடிபட்டதாக தகவல் வந்தாலும், குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. 

**நன்றி தினமலர் ** 

Saturday, February 12, 2011

குறும்படங்கள்...!

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் "கலைஞர் டிவி'க்கு கைமாறியதா?

சி.பி.ஐ., வலையில், "கலைஞர் டிவி'
                     "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, முன்னாள் தொலைத் தொடர்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதுடன், "ஸ்வான்' நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வாவும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து, "கலைஞர் டிவி' 200 கோடி ரூபாய் பெற்ற விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
                     "ஸ்வான் நிறுவனத்திற்கு சலுகை காட்டியதற்காக ராஜாவுக்கு வழங்கப்பட்ட லஞ்சப்பணம் தான் இது. இந்த பணம் தான், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்தினர் நடத்தும், "கலைஞர் டிவி'க்கு வந்துள்ளது' என, சி.பி.ஐ., வட்டாரங்கள், சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி, "எகனாமிக் டைம்ஸ்' மற்றும் "டைம்ஸ் ஆப் இந்தியா' போன்ற ஆங்கில நாளிதழ்களும், என்.டி.டி.வி., - டைம்ஸ் நவ் போன்ற ஆங்கில, "டிவி' சேனல்களும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

                


                               "ஸ்வான்' நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா இவரது நிறுவனம், "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டை, 1,537 கோடி ரூபாய்க்கு பெற்ற சில மாதங்களிலேயே, தனது 45 சதவீத பங்கை, ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான, "எடிசலாட்' நிறுவனத்திற்கு, 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த விவகாரத்தில், "ஸ்வான்' நிறுவனம் பெருமளவில் ஆதாயம் பெறும் நோக்கில் ராஜா செயல்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. "ஸ்வான்' நிர்வாகி ஷாகித், தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கு நெருக்கமான, "கலைஞர் டிவி'யில், 214 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக டில்லி சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ., நேற்று தெரிவித்தது. பல்வாவுக்கு சொந்தமான, "சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. பல்வாவின் உறவினர்கள் இயக்குனர்களாக உள்ள, "டி.பி.குழும நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்பட்டு, "கலைஞர் டிவி'க்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக சி.பி.ஐ., தன் மனுவில் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

**நன்றி தினமலர் ** 

Monday, February 7, 2011

பிச்சையெடுக்கும் சிறுவர்கள்

                         ராமேஸ்வரத்தில் பிச்சையெடுப்பதை தொழிலாக கொண்டவர்கள் ஏராளம். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 200 முதல் 400 ரூபாய் வரை கிடைப்பதாலும், யாத்ரீகர்கள் தரும் துணி, உணவுக்காக பிச்சையெடுத்து சம்பாதிக்கின்றனர். வருமானம் அதிகளவில் வருவதால் வெளியூர்களில் இருந்து வந்து இங்கு முகாமிட்டுள்ள இவர்கள், ராமேஸ்வரம் கோயில், அக்னிதீர்த்த கடற்கரை, கெந்தமாதன பர்வதம் பகுதியில் பிச்சையெடுப்பதை தொழிலாக செய்கின்றனர். இதில் உள்ளூர் கும்பலை சேர்ந்தவர்களும், வெளியூர் பிச்சைக்காரர்களுக்கு போட்டியாக பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர்.



                   இதன் வருவாயில் ஒரு பகுதியை குடிப்பதற்கும், மீதியை ஊரிலுள்ள தங்களது குடும்பத்திற்கு அனுப்பி வரும் இவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.  பள்ளிசெல்லும் வயதுடைய சிறுவர்களையும் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துவதும் அதிகரித்துள்ளது. பெற்றவர்களே பணத்துக்காக பிள்ளைகளை இச்செயலில் ஈடுபடுத்துகின்றனர்.

**நன்றி தினமலர் ** 



தமிழக அரசின் இலவசத்தால் வந்த பலன்

               தமிழக அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் தொகையை இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால், தொலைநோக்கு திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. தமிழக அரசின் கடன், 2009 மார்ச் 31 வரை, 74 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு, 89 ஆயிரத்து 149 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில், மேலும், 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே, கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.



               மத்திய அரசு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாயில், தமிழக அரசின் பங்கை, 5.305 சதவீதத்தில் இருந்து, 4.969 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்படி, 10 ஆயிரத்து 401 கோடி ரூபாய் கிடைக்கும். இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து திட்டங்களுக்காக பெறும் மானியம் 7,150 கோடி ரூபாய். வருவாய் இருந்தும், செலவுகள் போக மீதத் தொகையை இலவச காஸ், சைக்கிள், ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி - சேலை, இலவச மின்சாரம், பொங்கல் பரிசுப் பொருள், "டிவி' என, அரசு செலவிடுகிறது. குறிப்பாக, உணவு மானியமாக மட்டும், 4,000 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.

**நன்றி தினமலர் ** 

Monday, January 31, 2011

கலைஞருக்கு கடிதம்...!

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்
கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.
செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும்
விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து
விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்
சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.
             


அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு
விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த
டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும்
எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான
மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம்,
ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.
முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும்
உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம்
மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி
வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

“
நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல
போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது.
எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில
படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு
அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’
என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518
மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

Friday, January 28, 2011

Great Indian Goverment....!

2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ந் தேதி நடந்த சம்பவத்துக்கு 2011ம் ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு :

                  புதுடில்லி : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் தூக்கு ‌தண்டனை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ந் தேதி கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், அதிமுக பொதுச்செயலாளரும், அப்போதைய முதல்வரும் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பல இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்த சமயத்தில் தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேருந்து, தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக, சேலம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. 





                இந்த வழக்கை விசாரித்த சேலம் கோர்ட் தூக்கு தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது. இவர்கள், இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிலும் மேல்முறையீடு செய்தனர். சுப்ரீம் கோர்ட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பின் இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனு அளித்தனர். கருணை மனு நிலுவையில் உள்ள நிலையில் ‌இவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். இ;ந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் இந்த மறுஆய்வு மனு விசாரணை குறித்து நீதிபதிகளிடம் பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

**நன்றி தினமலர் ** 

கள்ளச்சந்தையில் எரிபொருள் விற்பனை


                   மாதம் இருமுறை பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருக்க, இன்னொருபுறம், ரூ. 10,000 கோடி அளவிற்கு கள்ளச்சந்தையில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விற்பனை அமோகமாக நடந்துள்ளது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம், காமன்‌வெல்த், ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு போன்ற ஊழல்களால் சிக்கலை சந்தித்துவரும் மத்திய அரசிற்கு, இந்த எரிபொருள் கடத்தல் விவகாரம் மேலும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

                ஒரு வாகனத்தில், 12 கிலோ லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பப்படும். இந்த வாகனம், தலா, 4 கிலோ கொள்ளளவு கொண்ட 3 பிரிவுகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இது வழக்கமான நடைமுறை ஆகும். ஆனால், கடத்தல் கும்பல் பயன்படுத்‌தும் வாகனங்களில், சிறப்பு அம்சமாக, ஒரு ரகசிய பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இந்த பகுதியில் 50 முதல் 100 லிட்டர் எரிபொருளை பதுக்க முடியும். 





             எண்ணெய் நிறவனங்களிலிருந்து எரிபொருளை நிரப்பிக் கொண்டு , பல்வேறு சோதனைகளை கடந்து, கிடங்கை விட்டு வெளியேறும் லாரி, அங்கிருந்து நேராக, கடத்தல் கும்பல் இருக்கும் பகுதிக்கு செல்லும். அங்கு தயாராக நிற்கும் கடத்தல் கும்பல், ரகசிய பகுதியில் உள்ள எரிபொருளை எடுத்து விடுவர். இந்த செயல்பாடுகள் பெரும்பாலும், நாசிக் - மும்பை நெடுஞ்சாலையில் நடைபெற்றுள்ளது.

              இந்த கடத்தல் சம்பவங்களில், தனியார் நிறுவன ஊழியர்கள், கடத்தல் கும்பல்களுக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளனர்.. கடத்தல் கும்பலின் கைக்கு வரும் எரிபொருள், பல்வேறு கலப்படத்திற்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. பெட்ரோல் விலை சமீபகாலமாக உயர்ந்து வரும் நிலையிலும், மண்ணெண்ணெய் விலை உயராததற்கு, அதில் கலப்படம் அதிகளவில் நடைபெறுவதே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

                  கடந்த 2005ம் ஆண்டில் மட்டும், கள்ளச்சந்தையில், ரூ. 10,000கோடி அளவிற்கு எரிபொருள் விற்பனை நடந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது....


**நன்றி தினமலர் **