புதுடில்லி:"அரசுத் துறைகளில் தற்போது பணம் இல்லாமல் எந்த காரியமும் நடப்பது இல்லை. குறிப்பாக, வருமான வரி, விற்பனை வரித்துறைகளில் லஞ்ச நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன.
எனவே, அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயிக்கலாம். லஞ்சத்தை ஒழிக்க இதுவே சிறந்த வழி' என, சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
நாட்டில் லஞ்சத்தை கட்டுப்படுத்த முடியாதது துரதிருஷ்டவசமானது. வருமானவரி, விற்பனை வரி, கலால் வரித்துறைகளில் லஞ்ச நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன. இது மிகவும் கவலை, அதிருப்தி தரும் விஷயம். அரசுத் துறைகளில் பணம் இல்லாமல் தற்போது எந்த வேலையும் நடப்பது இல்லை.இதைப் பார்க்கும்போது, லஞ்ச நடவடிக்கைகளை அரசு ஏன் சட்டமாக்க கூடாது என கேட்கத் தோன்றுகிறது.
ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட ஒரு தொகையை நிர்ணயிக்கலாமே. ஒருவர், தன் வேலையை முடிக்க வேண்டுமெனில், 2,500 ரூபாய் லஞ்சமாக கொடுக்கலாம் என, அறிவித்து விடலாம்.
இதன்மூலம் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வர். அதிகாரிகளிடம் பேரம் பேச வேண்டிய தேவையே இல்லையே. அரசு அதிகாரிகள் ஏழைகளாக உள்ளனர். அவர்களை குறை கூறக் கூடாது. ஏனென்றால், பணவீக்கம் அதிகரித்து விட்டது.
**நன்றி தினமலர் **

No comments:
Post a Comment